அல்பேட்டாவுக்கு ஆதரவு வழங்கும் ஒண்டாரியோ – கிறிஸ்டின் எலியட்

canada-watching-covid-19-surge

ஒன்டாரியோ மாகாண அரசாங்கம் மாகாணம் முழுவதும் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளில் covid-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வருகையை ஆதரிக்கும் என்று சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் அறிவித்தார். அல்பேட்டா ஊழியர்கள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகளை விட்டு பத்து நாட்களில் வெளியேறக் கூடும் என்று எச்சரிக்கை அறிவித்ததால் முதல்வர் ஜேசன் கென்னி மாகாணம் முழுவதும் அவசரகால நிலையை தெரிவித்தார்

ஒன்டாரியோ மாகாணம் covid-19 வைரஸ் தொற்றின் நான்காவது அலையை எதிர்கொள்ளும் போதும் அல்பேட்டாவுக்கு உதவுவதற்கு ஒன்டாரியோ உறுதி அளிப்பதாக கிறிஸ்டின் எழியட் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
Covid-19 வைரஸ் தொற்று தீவிரமாக பரவிய காலத்தில் ஒன்டாரியோ மாகாணத்திற்கு பல உதவிகள் தேவைப்பட்ட போது பிற மாகாணங்கள் உதவியது.அல்பேட்டாவுக்கு உதவ ஒன்டாரியோ நிச்சயமாக உடன் நிற்கும் என்று எலியட் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் நான்காவது அலையின் தாக்கத்தால் அல்பேட்டாவுக்கு உதவி செய்ய முடியாது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனையடுத்து ஒன்டாரியோ ஆதரவு அல்பேட்டாவுக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

 

Covid-19 வைரஸ் தொற்றின் தாக்கம் பிற மாகாணங்களை விட ஒன்ராரியோ மாகாணத்தில் கட்டுப்பாட்டில் உள்ளதாக தோன்றுகிறது. ஒன்டாரியோ மாகாணத்தில் covid-19 வழக்குகள் கடந்த வாரத்தை விட இந்த வாரம் கணிசமாக குறைந்துள்ளது. எதிர்வரும் வாரங்களில் மாகாணங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.

வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட 34,000 covid-19 பரிசோதனைகளில் நேர்மறையான வழக்குகள் பதிவாகியது. பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதால் மாகாணம் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.