கனடாவில் வணிகம் தொடங்குவதற்கு தயாரா? – குடியேறியவர்களை வரவேற்கிறது ஒன்ராறியோ அரசாங்கம்

business immigrants ontario government

சர்வதேச நாடுகளிலிருந்து வர்த்தகம் தொடர்பாக பல தொழில்முனைவோர்கள் கனடாவிற்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். கனடாவின் ஒன்ராரியோ மாகாணம் கனடாவிற்கு புலம் பெயர்ந்துள்ள 100 தொழில் முனைவோர்களை தேடுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒன்டாரியோவில் புலம்பெயர்ந்த தொழில்முனைவோர்களின் வர்த்தகம் செயல்படவேண்டும்.

வணிகம் தொடங்குவதற்கு ஆர்வமுள்ள தொழில்முனைவோர்கள் ,வணிக பங்குதாரர்கள் மற்றும் டெவலப்பர்கள் Ontario immigrant nominee plan (ONIP) என்ற திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு தொழில் முனைவோரும் தங்களது வணிகத்தில் குறைந்தபட்சமாக $200,000 முதலீடு செய்ய வேண்டும்.

ஒன்டாரியோ மாகாணத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை தங்களது வணிகம் செயல்பட்ட உடன் தொழில்முனைவோர்கள் ஒன்றாரியோ மாகாண அரசாங்கத்தின் நியமனத்தை பெற்றுக்கொள்ளலாம். மாகாண அரசாங்கத்தின் இந்த நியமனத்தை கனடிய குடியேற்றத்திற்காக மத்திய அரசாங்கத்திற்கு விண்ணப்பிக்கவும் பயன்படுத்தலாம்.

ஒன்டாரியோ அரசாங்கத்தின் இந்த திட்டத்தின் மூலம் உள்ளூர் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கலாம் என்றும் covid-19 ஊரடங்கு காரணமாக வேலை இழந்தவர்களுக்கு ஆதரவு அளிக்கலாம் என்றும் மாகாண அரசாங்கம் ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது .

இத்திட்டத்திற்கு ஏறத்தாழ $6 மில்லியன் டாலர்கள் மாகாண அரசாங்கம் செலவிடும் என்று தொழில்துறை அமைச்சர் மான்டி மெக்நாட்டன் தெரிவித்தார். மாகாணத்தில் தொழில் தொடங்க வரும் புலம்பெயர்ந்த தொழில்முனைவோர்களால் நிதியானது திருப்பி செலுத்தப்படும்.

புலம்பெயர்ந்த தொழில்முனைவோர்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவார்கள் மேலும் $20 மில்லியன் முதலீட்டை வணிகத்தில் செலுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.