QR குறியீட்டை பயன்படுத்தி தடுப்பூசி நிலையை நிரூபிக்கும் ஒண்டாரியோ மக்கள் – தடுப்பூசி ரசீது

restaurant food
mayor

ஒன்ராரியோ மாகாணத்தில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி மருந்துகளை முழுமையாக பெற்றுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன. தடுப்பூசி மருந்து பெற்றுக் கொண்டவர்களுக்கு தடுப்பூசி ரசீதுகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. தடுப்பூசி ரசீதுகளை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளும் வசதி மாகாண அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த புதன்கிழமை ஒன்டாரியோ அரசாங்கத்தின் இணையப் பக்கத்தில் இருந்து சுமார் 600000 தடுப்பூசி ரசீதுகள் மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை 2.7 மில்லியன் பதிவிறக்கம் நடைபெற்றுள்ளது. புதன்கிழமையன்று 637000 pdf தடுப்பூசி ரசீதுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தெரிவித்தார்.

உட்புற உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் திரையரங்குகள் போன்ற அத்தியாவசியமற்ற நிகழ்வுகளுக்கு 12 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஒன்டாரியோ மக்களும் தடுப்பூசி சான்றிதழை வழங்க வேண்டும்.வாடிக்கையாளர்கள் புகைப்பட அடையாளத்துடன் ,தடுப்பூசி ரசீது நகலை வணிகங்களில் நுழையும்போது காண்பிக்க வேண்டும் என்று அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

தடுப்பூசி ரசீது ஆவணத்தை பதிவிறக்கம் செய்வதற்கு 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஆகும் என்று தடயவியல் ஆய்வாளர் ஷப்னம் ஃபரீத் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மக்கள் தங்களது தடுப்பூசி நிலையை நிரூபிக்க ஸ்கேன் செய்யக்கூடிய QR குறியீடுகளை எதிர்வரும் அக்டோபர் மாதம் 22ஆம் தேதி வரை வழங்க முடியும் என்று போர்டு அரசாங்கம் கூறியுள்ளது.QR குறியீடு பயன்பாட்டை அறிமுகப்படுத்துவது மிகவும் சிறந்த வழிமுறை என்று Kaur கூறினார்.

PDF ஆவணம் என்பது எளிமையான ஆவண வகை என்பதால் அனைத்து மக்களாலும் எளிதாக ஆவணத்தை கையாள முடியும் என்று கூறப்படுகிறது.