மாகாணங்களுக்கு இடையேயான விமான பயணிகளுக்கு covid-19 பரிசோதனையை கட்டாயம்? ஒன்றாறியே அரசின் அவசர கோரிக்கை!

China
China temporarily bars entry of foreigners travelling from Canada

ஒன்டாரியோ அரசாங்கம் ஒட்டாவா அரசாங்கத்திடம் மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்தினை கட்டுப்படுத்துவதற்கு கோரிக்கை முன்வைத்துள்ளது.

Covid-19 வைரஸ் தொற்று உருமாறிய திரிபுகள் மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து பயணிகளிடையே தொற்றிக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

தற்போது ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் பொது பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சர்களுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி உள்ளது.

கடிதத்தில் ஒன்டாரியோ மாகாணம் ஏற்கனவே தனது எல்லைப் பகுதிகளான கியூபெக் மற்றும் மணிதொபா பகுதிகளுக்கு இடையேயான போக்குவரத்து சேவையினை முடக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் அவசியமற்ற பிரயாணங்களையும் தடை செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.இதனையடுத்து போக்குவரத்து சேவையினை தடை செய்த பின்பு உருவாகியுள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை என்றும் பெடரல் அமைப்பின் பொறுப்பில் இந்த பணி உள்ளடக்கப் பட்டிருப்பதாகவும் மாகாண அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் மாகாணங்களுக்கு இடையேயான விமான பயணிகளுக்கு covid-19 பரிசோதனையை கட்டாயமாக செய்ய வேண்டுமென்று ஒன்டாரியோ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் பல்வேறு கட்டுப்பாடுகளை அதிகரித்து பன்னாட்டு விமான சேவைக்கு அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கடிதத்தினை கனடிய ஊடகங்களுக்கு மாகாண அரசாங்கம் பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த இரண்டு வாரங்களில் 17 உள்நாட்டு விமானங்களில் பயணித்து வந்த பயணிகளில் அதிகமான பயணிகளுக்கு கோவிட் 19 தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.