ஒன்டாரியோவில் covid-19 வைரஸால் ஏற்பட்ட மரணங்கள் – தடுப்பூசி பெறாதவர்களுக்கு எச்சரிக்கை

corona virus in canada justin trudeau n95 mask covid 19

ஒன்ராரியோ மாகாணத்தில் கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட Covid-19 தடுப்பூசி மருந்துகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. Covid-19 கட்டுப்பாடுகளுடன் பல்வேறு துறைகளும் இயங்குகிறது. எனினும் Covid-19 வழக்குகள் நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் தினசரி பதிவாகின்றன. Covid-19 தீவிரத்தால் மரணங்களும் பதிவாகி வருகின்றன.

ஒண்டரியோ மாகாணத்தில் 811 Covid-19 வழக்குகள் ஞாயிற்றுக்கிழமையில் பதிவாகியுள்ளன. மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். Covid-19 வைரஸ் தொற்றின் தாக்கம் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அதிகரித்துள்ளது. சில வாரங்களாக Covid-19 வழக்குகள் பட்டியலில் உச்சத்தை எட்டியுள்ளது.

கடந்த சனிக்கிழமை 944 Covid-19 வழக்குகளும், வெள்ளிக்கிழமை 805 வழக்குகளும் பதிவாகியதாக புள்ளிவிவரங்கள் தகவலை வெளியிட்டுள்ளன.கடந்த வாரம் covid-19 ஏழு நாள் சராசரி 688 ஆக இருந்தது. இந்த வாரம் covid-19 வழக்குகளின் ஏழு நாள் சராசரி 757 ஆக உயர்ந்துள்ளது.

மாகாணத்தில் புதியதாக பதிவாகியுள்ள வழக்குகளில் 580 பேர் covid-19 தடுப்பூசி மருந்துகள் போட்டுக் கொள்ளாதவர்கள் மற்றும் முதல் கட்ட தடுப்பூசி மட்டும் பெற்றுள்ளவர்கள் என்று தகவல்கள் கூறுகின்றன. இது 72% ஆகும்
ஒன்ராறியோவின் மக்கள்தொகையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் மற்றும் முதல் தவணை தடுப்பூசி மட்டுமே பெற்றுக் கொண்டவர்களின் சதவீதம் 33 சதவீதம் ஆகும்.

ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட மூன்று உயிரிழப்புகளில் இரண்டு உயிரிழப்புகள் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக நடந்தது என்று சுகாதாரத்துறை அமைச்சர் கிறிஸ்டியன் எலியட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.

ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்து 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 9,548 பேர் covid-19 வைரஸ் தொற்றால் பாதிப்படைந்து உயிரிழந்துள்ளனர். 5,53,000 பேர் covid-19 வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 6500 க்கும் மேற்பட்டோர் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன