பதற்ற நிலையை உருவாக்கியுள்ள தடுப்பூசி மருந்து – ஒன்டாரியோ சுகாதார அமைப்பு

Moderna
The storage requirements of the Moderna vaccine, just approved by Health Canada, are less onerous than those required for Pfizer-BioNTech's vaccine. (Dado Ruvic/Reuters)

ஒன்ராரியோ மாகாணத்தில் covid-19 தடுப்பூசி மருந்துகள் விரைவாக வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் தகுதியுள்ள கனடியர்கள் அனைவருக்கும் செலுத்தப்படுகின்றன.

கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகளில் ஒன்றான பைசர் தடுப்பூசி மருந்துகளை மாகாணத்தின் வயதுவந்த பெரியவர்களுக்கு செலுத்துமாறு ஒன்டாரியோ அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. மாடர்னா தடுப்பூசி மருந்து போட்டுக் கொண்ட பிறகு அரிதான இதய நிலையை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மாகாணத்தின் இளைய பெரியவர்களுக்கான முன்னுரிமை புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. 18 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் மாடர்னா தடுப்பூசி மருந்துகளை பெறமுடியும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இயல்பு நிலையில் வயது வந்த பெரியவர்களுக்கு பைசர் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படும்.

புதிதாக வெளியிடப்பட்ட பரிந்துரை மக்களில் சிலரை பதற்றம் அடைய செய்யலாம் மற்றும் covid-19 தடுப்பூசி மருந்துகள் குறித்த கவலைகளை அதிகரிக்கச் செய்யலாம் என்று செய்தி மாநாட்டின்போது மருத்துவ அதிகாரி மருத்துவர் கீரன் மூர் கூறினார்.

இரண்டாவது கட்ட தடுப்பூசி மருந்து மாடர்னா பெற்றுக் கொண்ட 17000 பெண்களில் ஒருவருக்கு இதய சம்பந்தமான பெரிகார்டிஸ் அல்லது மாரடைப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

Covid-19 தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்பட்டவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உடல் நலன் உறுதி செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர் என்று மூர் சுட்டிக்காட்டினார்.