பொதுப் பள்ளிகள் மூடப்பட்டன – ஆசிரியர், மாணவர்களிடையே வைரஸ் தொற்று பரவல்

tph covid rapid test schools
toronto public health

ஒன்ராரியோ மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்று கட்டுப்பாடுகளுடன் பாடசாலைகள் இயங்குகின்றன. பாடசாலைகளில் மாணவர்களிடையே covid-19 வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்டால் பள்ளிகள் மூடப்படும். இந்த கல்வி ஆண்டில் வைரஸ் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுவரை ஒன்ராரியோ மாகாணத்தில் பத்து பள்ளிகள் வைரஸ் தொற்று பரவலால் மூடப்பட்டுள்ளன. பிளமிங்டன் பூங்காவில் உள்ள பள்ளியில் மாணவர்களிடையே வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால் செவ்வாய்க்கிழமை காலை முதல் மெய்நிகர் வகுப்புகளுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் 246 covid-19 வழக்குகள் பள்ளியிலிருந்து பதிவானதாக கூறப்படுகிறது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 277 பள்ளி தொடர்பான covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளது.

கனடாவின் அனைத்து மாகாணங்களிலும் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான பைசர் தடுப்பூசி மருந்துகளை இன்று முதல் செலுத்த தொடங்குகின்றன. இனிவரும் குளிர்காலங்களில் பள்ளிகள் மூடுதலை தவிர்க்க குழந்தைகளுக்கான தடுப்பூசி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி தகுதியானது என்பது அனைவருக்கும் இனிய செய்தியாகும். இந்த வயதினருக்கு தடுப்பூசி போடுவதில் குறிப்பிடத்தக்க நன்மை இருப்பதாக தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் கீரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.