ஒன்டாரியோவில் அதிகரிக்கும் தொற்று – பொது சுகாதார அதிகாரிகள் சிறப்பு கூட்டம்!

COLCHICINE
CANADIAN ANTI-INFLAMMATORY DRUG COLCHICINE REDUCES COVID-19 RELATED COMPLICATIONS, DEATH

உலக நாடுகள் அனைத்தும் covid-19 வைரஸ் தொற்றினை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறது.

கனடாவில் ஒன்டாரியோ பகுதியில் தொடர்ந்து covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

ஒன்ராரியோ மாகாணத்தில் வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதை அடுத்து பொது சுகாதார அதிகாரிகள் சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்தப்போவதாக திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் கனடாவின் அனைத்து மாகாணங்களிலும் ஒரு சில துறைகளுக்கு தளர்வுகள் உடன் மீளத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது .ஒ

ன்டாரியோவின் குறிப்பிட்ட சில இடங்களில் கட்டுப்பாடுகளுடன் மீள திறக்க பல்வேறு துறைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே ஒன்ராரியோ மாகாணத்தில் வைரஸ் தொற்றுக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் காரணத்தாலேயே சிறப்பு ஆராய்வு கூட்டம் நடத்தப்பட தீர்மானம் செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

மேலும் பிராந்தியத்தின் அடிப்படையிலான பகுதிகளுக்கு covid-19 கட்டுப்பாட்டு விதிமுறைகளை கட்டாயப்படுத்த வேண்டும் என தகவல்கள் கூறுகின்றன.

பிராந்திய அடிப்படையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இந்த சிறப்பாக ஆராய்வு கூட்டத்தின் பின்னர் ஒன்டாரியோ மாகாணத்தின் பொது சுகாதார அதிகாரிகள் இந்த சிறப்பு கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளது என்பது தெளிந்த முடிவாகும்.

ஒன்ராரியோ மாகாணத்தில் மக்கள் அனைவரும் முக கவசம் மற்றும் சனிடைசர் கண்டிப்பான முறையில், பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி மருந்துகள் ஒன்டாரியோ மகாணத்தில் உள்ள மூத்த வயதினருக்கு தற்பொழுது வினியோகிக்கப்பட்டு வருகிறது.