அஸ்திரா ஜெனிகா கொரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் விதித்துள்ள வயது கட்டுப்பாடு!

AstraZeneca vaccine
Ontario premier says new age recommendations for AstraZeneca vaccine

முதல்வர் டாக் போர்டு அஸ்திரா ஜெனிகா தடுப்பூசி மருந்துகளை 60 முதல் 65 வரையிலான வயதுடையவர்களுக்கு, ஒன்ராறியோவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் வினியோகிக்கப் படுவதாகவும் அறிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அன்று காலை covid-19 வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி மருந்துகளை விநியோகிப்பதற்கான கால அட்டவணை திட்ட ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இந்த ஏற்பாடுகளுக்கான முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த வியாழக்கிழமை டொராண்டோ  பகுதியிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மருந்தகங்களில் தடுப்பூசி மருந்துகள் வினியோகிக்கப்பட்டன.

கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் அஸ்திரா ஜெனிகா தடுப்பூசி மருந்துகளை 60 வயதில் இருந்து 64 வயது வரையிலான மக்களுக்கு பரிந்துரைத்து வருகின்றனர்.

அஸ்திரா ஜெனிகா தடுப்பு ஊசி மருந்தானது சேமித்து வைப்பதற்கு எளிதாகவும் பரிமாற்றம் செய்ய எளிதாகவும் மற்றும் மருந்தகங்கள் மற்றும் மருத்துவர்களின் அலுவலகங்கள் போன்றவற்றிற்கு வினியோகிக்க ஏதுவாகவும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இரண்டு வாரங்களுக்கு முன்பு என் ஏ சி ஐ கழகமானது அஸ்திரா ஜெனிகா தடுப்பூசி மருந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு சரியான விகிதத்தில் செயல்படுவதாகவும், மேலும் சிறந்த முடிவுகளை தருவதாகவும் ஆய்வுகள் கூறியிருந்தது.

ஆனால் ஒன்டாரியோ அரசாங்கம் அஸ்திரா ஜெனிகா தடுப்பூசி மருந்துகளுக்கு வயது கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது.

அதனால் குறிப்பிட்ட வயது உடையவர்களுக்கு மட்டுமே இந்த தடுப்பூசி மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்