உயிரைக் கொடுத்து மக்களை காப்பாற்றியும் பலன் இல்லையே! ஒன்ராறியோ மாகாணத்தில் செவிலியர்களுக்கு நேரும் அவலம்!

Toronto Doctors

ஒரு வருடத்திற்கும் மேலாக ஒன்ராரியோ மாகாணத்தில் covid-19 நோயாளிகள் தொடர்ந்து  அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் ஓய்வின்றி பணிபுரிவதால் உடல் சோர்வு மன அழுத்தம் போன்ற உணர்வுகள் அதிகம் ஏற்படுவதாக தெரிவித்து உள்ளனர்.

மேலும் செவிலியர்கள் அனைவரும் மதிப்பு குறைவாகவும், மரியாதை குறைவாகவும் நடத்தப்படுவதாக உணர்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

covid-19 வைரஸ் தொற்று தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் சூழலில் அனைவருக்கும் தற்காலிகமாக வேலை வாய்ப்பு வழங்கி குறைந்த அளவிலான தொகையை சம்பளமாக கொடுத்து தங்களை பயன்படுத்திக் கொள்வதாக தெரிவித்து வருகின்றனர்.

கடந்த மாதம் முதல் தற்பொழுது வரை ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் covid-19 நோயாளிகள் நான்கு மடங்காக அதிகரித்து உள்ளனர் என்பதையும் தெரிவித்து உள்ளனர்.

மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் எப்பொழுதும் 900 க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருந்துகொண்டே இருக்கின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவற்றில் 611 நோயாளிகள் வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவியின் மூலம் ஆக்சிஜன் பெற்றுக் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covid-19 வைரஸ் தொற்று பரவிய தொடக்க கால கட்டத்தில் இருந்து ஓய்வின்றி தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தற்பொழுது வரை ஊதியம் அதிகரித்து ஊக்குவிக்க படாமல் இருப்பதையும் குறித்து தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள் மட்டுமின்றி செவிலியர்களும் ஓய்வின்றி பணிபுரிகின்றனர் என்பதையும் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மாகாண முழுவதும் நான்காவது அலையாக வைரஸ் தொற்று பரவுதலை ஏற்படாமல் தவிர்ப்பதற்கு அரசாங்கத்தோடு இணைந்து மக்களும் ஒத்துழைக்க வலியுறுத்தப்பட்டது.