ஒன்ராறியோவில் தடுப்பூசி சான்றிதழ் – திரையரங்குகள் போன்றவற்றை அணுகுவதற்கு அவசியம்

doug_ford
After new modelling data showed the current wave could continue into summer if nothing changes

தடுப்பூசி சான்றிதழ் குறித்து ஒன்டாரியோ அரசாங்கம் தகவல்கள் வெளியிட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு கட்டுப்பாடுகளுடன் பல்வேறு துறைகளும் இயங்கி வருகின்ற நிலையில் பாதுகாப்பான பொருளாதாரத்திற்கு தடுப்பூசி சான்றிதழ் சிறந்த முறையாகும்.

தடுப்பூசி சான்றிதழ் ஒன்டாரியோ மாகாணத்தில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி முதல் திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் போன்ற பல அத்தியாவசியமற்ற துறைகளுக்கு தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி சான்றிதழ் திட்டத்தின் கீழ் உள்ள உணவு விடுதிகளில் உணவருந்த வேண்டும் என்று மாகாண அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

வங்கிகள், சில்லரை வர்த்தகம் மற்றும் வெளிப்புற உணவு விடுதிகள் போன்றவற்றிற்கு தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லை என்றும் அறிவித்துள்ளது. திரையரங்குகள், இசைக்கச்சேரிகள், கூட்டம் திரளும் பெரிய நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் போன்றவற்றிற்கு செல்ல விரும்புபவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும்.

ஒன்டாரியோவின் சுகாதார அமைச்சர், தலைமை சுகாதார மருத்துவர் மற்றும் முதல்வர் டாக் போர்ட் இன்று பிற்பகல் அறிவிப்பினை வெளியிடுவர் என்று கூறப்படுகிறது .தடுப்பூசி சான்றிதழுக்கான QR குறியீட்டினை வணிகங்கள் சரிபார்க்க பயன்பாடு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூபெக், மணிதொபா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற கனடிய மாகாணங்களில் தடுப்பூசி பாஸ்போர்ட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்டாரியோவில் தடுப்பூசி சான்றிதல் முறையை எளிதாக்கும் திட்டத்திற்காக போர்டின் அமைச்சரவை பலமுறை கூடி கலந்தாலோசித்து உள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி வரை அத்தியாவசியமற்ற வணிகங்களை அணுகுவதற்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் கோவிட்- 19 தடுப்பூசியை பெற்றிருக்க வேண்டும் .அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி வரை 2 டோஸ் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது