உணவகங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் முழுமையாக திறக்கப்படும் – ஒன்றாரியோ மாகாண அரசாங்கம்

3M N95 Mask

ஒன்ராரியோ மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் கணிசமாக குறைவதை தொடர்ந்து சில வணிகங்கள் 100% செயல்திறனுடன் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடங்கள், உணவகங்கள் போன்றவை அடுத்த வாரம் முதல் முழுமையாக இயக்கப்படும்.

உணவகங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு திறன் கட்டுப்பாடுகளை திங்கட்கிழமை முதல் நீக்கலாம் என்று முதல்வர் டக் போர்டின் அரசாங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது

.covid-19 கட்டுப்பாடுகளை பாதுகாப்பாக திறப்பதற்கு ஒன்ராரியோ மாகாணத்தின் திட்டங்களை சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் அறிவிப்பார் என்று அவரது செய்தி தொடர்பாளர் கூறினார்.

வருகின்ற வசந்தகாலத்திற்குள் முகக்கவசம் அணிவதற்கான ஆணைகள் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. பொது நிகழ்வுகளில் முக கவசம் அணிவதற்கான கட்டளைகளை எப்போது நீக்குவது என்பது குறித்து வியாழக்கிழமை தனது அமைச்சரவையில் டக் போர்டு விவாதம் செய்தார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மற்ற சுகாதார நடவடிக்கைகளை படிப்படியாக தளத்துவதற்கு மாகாண அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.மாகாணத்தின் தடுப்பூசி சான்றிதழின் புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசி பயன்பாடுகள் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஒன்ராரியோ மாகாணத்தில் 12 வயதிற்கு மேற்பட்ட தகுதியுள்ள கனடியர்கள் 73 சதவீதத்தினர் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.