ஒன்டாரியோ அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் கவலையில் உள்ள உரிமையாளர்கள் – செலவினங்களில் பாதி தள்ளுபடி என்று அறிவிப்பு

restaurant food
mayor

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் தீவிரமாக பரவி வரும் covid-19 மற்றும் ஓமிக்ரோன் கவலைகளின் காரணமாக மாகாண அரசாங்கம் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. மாகாண அரசாங்கம் covid-19 கட்டுப்பாடுகளை விதித்த பிறகு தொழிலாளர்கள் பணி நீக்கங்களுக்கு தயாராகின்றனர்.

புதன்கிழமை முதல் இரவு 10 மணிக்கு மேல் பார்கள் இயங்கக் கூடாது. ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டு உணவகங்களில் உட்புற அனுமதிகளை நிறுத்த வேண்டுமென்று திங்கட்கிழமையன்று பொது சுகாதார நடவடிக்கைகளை அறிவித்தார். மாகாண அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் வணிக உரிமையாளர்கள் நிறுவனங்களின் எதிர்கால நிலைமையை பற்றி கவலைப்படுகிறார்கள்.

வணிக வளாகங்கள், சில்லரை விற்பனையகங்கள் ,மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு சேவை மையங்கள் போன்றவை 50 சதவீத செயல்திறனுடன் இயங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள் ,கச்சேரி நிகழ்ச்சிகள் மற்றும் அருங்காட்சியகங்கள் போன்றவை முழுமையாக மூடப்படும்.

Covid-19 வழக்குகளை குறைப்பதற்கு மகாண அரசாங்கத்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஜனவரி 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. மூன்று வாரங்களுக்கு வணிகங்கள் நிறுத்தப்பட்டால் தொழிலாளர் பற்றாக்குறை, வருமான இழப்பு மற்றும் செலவுகள் அதிகமாகும் என்று உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

புதிய மூடுதல் அறிவிப்புகளால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கான விரிவாக்கப்பட்ட தள்ளுபடியுடன் பொருளாதார அழுத்தங்களை தணிக்கும் முயற்சியில் ஒன்டாரியோ அரசாங்கம் ஈடுபட்டது. 50 சதவீத திறனுடன் இயங்கும் வணிகங்களுக்கு செலவினங்களில் பாதி தள்ளுபடியாக பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது