ஓமிக்ரோன் அச்சத்தில் ஒண்டாரியோ மாகாணம் – மீண்டும் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள்

horacio arruda
Quebec is entering second COVID-19 wave: Horacio Arruda

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் கவலைக்குரிய மாறுபாடான omicron அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் ஒன்டாரியோவில் பொது சுகாதார நடவடிக்கைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சமூக கூட்டங்களில் கட்டுப்பாடுகள் மற்றும் உணவகங்களில் திறன் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஓமிக்ரோன் மாறுபாடு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் ஒண்டாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் புதிய கட்டுப்பாடுகளை கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிவித்தார்.

உடற்பயிற்சி கூடங்கள், உள் அரங்கங்கள் மற்றும் உணவகங்கள் 50 சதவீத திறன்கள் உடன் மட்டுமே செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உள்ளக சமூக கூட்டங்களில் பத்து பேருக்கு மேல் கலந்து கொள்ள இயலாது. மேலும் வெளிப்புற கூட்டங்களில் அதிகபட்சமாக 25 பேர் மட்டுமே பங்கேற்க இயலும்.

வைரஸ் தொற்று வழக்குகள் வேகமாக அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் போன்ற பிற பெரிய அரங்குகளில் பானங்கள் மற்றும் உணவுகள் வழங்குவதற்கு அனுமதி கிடையாது.

Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கு மக்களை ஊக்கப்படுத்தும் பிரச்சாரத்தை ஒன்டாரியோ மாகாணம் செயல்படுத்தி வருகிறது. பூஸ்டர் தடுப்பூசி மருந்துகளை மக்கள் அனைவரும் தவறாமல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி மருந்து பெற்று கொண்டவர்களையும் வீரியமிக்க ஓமிக்ரோன் மாறுபாடு தாக்குவதால் பொது சுகாதார நடவடிக்கைகள் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளன என்று முதல்வர் டக் போர்ட் தெரிவித்தார்.