இனி கனேடியர்களுக்கான தடுப்பூசி மருந்து வழங்குதலில் எந்த ஒரு சிக்கல்களும் ஏற்படாது!

justin
Canada Lost Many peoples

கொரோனா வைரஸ் தொற்று பரவலின் போது தடுப்பூசி மருந்துகள் பிற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்வதில் கனடா பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது.

தடுப்பூசி மருந்துகள் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் பெற்றுக்கொள்ளப்பட்டது. கனடா அரசாங்கம் அறிவித்தபடியே மார்ச் மாதத்திற்குள் அனைத்து மருந்துகளும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

தற்பொழுது தடுப்பூசி மருந்துகள் அனைத்தையும் கனடாவில் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் விரைவாக விநியோகிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ “இனி கனேடியர்களுக்கான தடுப்பூசி மருந்து வழங்குதலில் எந்த ஒரு சிக்கல்களும் ஏற்படாது “என்று அறிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச அளவில் Covid-19 தடுப்பூசி மருந்துகளுக்கு உள்ள அலட்சியம் கனடாவில் இருக்காது என்றும் கூறியுள்ளார் .

நாடாளுமன்றத்தில் இந்த அறிவித்தலை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ளார். மேலும் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையே கனடா அரசாங்கம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக அறிவித்து, இரண்டு நாடுகளின் உடன் உள்ள பரஸ்பர உறவை வெளிப்படுத்தியுள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ.

தடுப்பூசி மருந்துகள் கனடாவின் அனைத்து மாகாணங்களுக்கும் விநியோகிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.