1 மில்லியன் கனேடிய மக்களுக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஜூன் மாதம் – காரணம் என்னவாக இருக்கும்.?

hiring-labour

கனடாவில் கடந்த ஜூன் மாதத்தில் 9,53,000 வேலை வாய்ப்புகள் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வேலையின்மை விகிதம் வெகுவாக குறைந்துள்ளது.

ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட 1 மில்லியன் கனேடிய மக்களுக்கு வேலை கிடைத்துள்ளது என்று கனடா புள்ளி விவரங்கள் துறை கூறுகிறது.

கொரோனா தொற்றால், கடந்த சில வாரங்களாக மூடப்பட்டிருந்த வணிகங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. கடைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட கடுமையான இழப்புக்கு பிறகு ஜூன் மாதம் மெல்ல மெல்ல பொருளாதாரம் சீரடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் 4,88,000 முழுநேர வேலைகள் மற்றும் 465,000 பகுதிநேர வேலைகள் உட்பட 953,000 வேலைகள் கடந்த உருவாக்கப்பட்டுள்ளன. மே மாதத்தில் வேலையின்மை விகிதம் 13.7 சதவீதத்தில் இருந்து 12.7 சதவீதமாக சரிந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms