மொன்றியலில் புத்தாண்டில் இரண்டாவது இரவில் ஊரடங்கு உத்தரவை அத்துமீறிய நபர்கள் – காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை

police montreal arrested

கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் covid-19 வழக்குகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. கவலைக்குரிய மாறுபாடான ஓமிக்ரோன் தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே கனடாவில் உள்ள மாகாணங்களின் covid-19 தொடர்களின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப மாகாண அரசாங்கங்கள் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றன.

கியூபெக் மாகாணத்தில் covid-19 வழக்குகள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் மாகாணத்தின் சுகாதார அமைப்பு கட்டுப்பாடுகளை அதிகரிக்கும்படி வலியுறுத்தியது மான்ட்ரியல் பகுதியில் கியூபெக் அரசாங்கத்தின் covid-19 ஊரடங்கு உத்தரவுகளை சிலர் அத்துமீறி உள்ளனர்.

கியூபெக் மாகாண அரசாங்கத்தின் புதிய ஊரடங்கு உத்தரவை அத்துமீறுபவர்களுக்கு $1000 முதல் $6000 டாலர்கள் வரை அபராதமாக விதிக்கப்படும் என்று வியாழக்கிழமை அன்று தெரிவிக்கப்பட்டது. கியூபெக் அரசாங்கத்தின் இரண்டாவது ஊரடங்கு உத்தரவை கனேடிய சிவில் லிபர்டீஸ் அசோசியேசன் கண்டித்துள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் covid-19 வழக்குகள் அதிகரித்து வருகின்ற நிலையில் கனடாவில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு உட்பட கியூபெக் அரசாங்கத்தால் இரண்டாவது ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2021 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஐந்து மாதங்களுக்கு தொடர்ந்து நீடித்தது.

Covid-19 நோய்த்தொற்று தொடர்பான 8 மரணங்கள் கியூபெக் மாகாணத்தில் பதிவாகியுள்ளன. மேலும் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய covid-19 வழக்குகள் பதிவாகி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். கியூபெக் மாகாணம் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.