மாடர்னா covid-19 தடுப்பூசி மருந்து காலாவதியாகும் அபாயம் – ஜஸ்டின் பிரேட்ஸ் எச்சரிக்கை

Moderna
The storage requirements of the Moderna vaccine, just approved by Health Canada, are less onerous than those required for Pfizer-BioNTech's vaccine. (Dado Ruvic/Reuters)

ஒன்டாரியோ மாகாணத்தின் மருந்தாளர்கள் ஆயிரக்கணக்கான மாடர்னா covid-19 தடுப்பூசி மருந்துகள் காலாவதியாகும் அபாய நிலையில் உள்ளதாக கூறினர்.covid-19 மாடர்னா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மக்கள் தயக்கமின்றி முன்வர வேண்டும். அவ்வாறு இல்லையெனில் மாடர்னா தடுப்பூசி மருந்துகள் வீணாகிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒன்டாரியோ மாகாணத்தின் மருந்தாளர்கள் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி , ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் சில மாடர்னா தடுப்பூசி மருந்துகள் காலாவதியாகிவிடும் என்று தெரிவித்தார். மொத்தமாக பெற்றுக்கொள்ளப்படும் மாடர்னா தடுப்பூசி மருந்துகளை 30 நாட்களுக்குள் உபயோகப்படுத்த வேண்டும் என்றும் அறிவித்தார்.

ஒன்ராரியோ மாகாணத்தில் தடுப்பூசி விநியோகங்களில் ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் மக்கள் அனைவரும் பைசர் பயோடெக் covid-19 தடுப்பூசி மருந்துகளை தயக்கமின்றி விருப்பத்துடன் செலுத்தி கொள்வதாலும் மாடர்னா தடுப்பூசி விநியோகித்தலில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மாடர்னா தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்படுவதில் மருந்தாளர்களுக்கு கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருப்பதாகவும் ஜஸ்டின் பிரேட்ஸ் தெரிவித்தார்.

ஒன்ராறியோவின் சுகாதார அமைப்பு 21 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட மாடர்னா தடுப்பூசி மருந்துகள் காலாவதியாகி வீண் அடைவதற்கு முன்பு பொதுமக்கள் அனைவரும் மாடர்னா தடுப்பூசி மருந்துகளை போட்டுக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

தடுப்பூசிகள் வீண் அடைவதை தவிர்ப்பதற்கு திட்டமிட்ட அடிப்படையில் மருந்தகங்கள் தடுப்பூசி மருந்துகளை பெற்றுக் கொள்கின்றன. மேலும் கழிவுகளை குறைப்பதற்கு தடுப்பூசி மருந்து விநியோகங்களை அதிகரிக்க வேண்டுமென்று ஜஸ்டின் பிரேட்ஸ் கூறினார்

குப்பிகளில் உள்ள தடுப்பூசி மருந்துகள் 14 தடுப்பூசி சாட்களுக்கு நிறைவானதாக இருக்கும். ஒரு குப்பியை துளைத்து 12 மணி நேரத்திற்குள் குப்பியில் உள்ள 14 ஷாட்களையும் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் மருந்துகள் வீணாகிவிடும் என்று அறிவுறுத்தினார்