கனடாவில் கொரோனா பரவல் எதிரொலி! நாடு முழுவதிலும் நடைமுறைக்கு வரும் புது நுட்பம்.? வெளியான பிரதமரின் அறிவிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கண்காணிப்பதை இலக்காக கொண்ட, நோய் தொடர்பரிதல் கண்காணிப்பு செயலி அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதனை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்தச் செயலியை பொதுமக்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாது, இந்த செயலியை பயன்படுத்தும் பொதுமக்களின் இரகசியத் தகவல்கள் பாதுகாக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சமீபத்திய தொடர்புகளை விரைவாகக் கண்டுபிடிக்க இச்செயலி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.

இதன் மூலம் கொரானா வைரஸ் பரவலைக் கண்காணிக்கவும், குறைக்கவும் முடியும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய மத்திய அரசு விரைவில் கடுமையாக பரிந்துரைக்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருந்தார்.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms