மெக்சிகோ,இந்தியா,பாகிஸ்தான் -அயல்நாடுகளில் படுகொலை செய்யப்பட்ட கனடியர்கள்

tulum-mexico-violence
pc-global news japan india canadian murder tulum-mexico-violence

முதன்முறையாக கனடிய அரசாங்கம் வெளிநாடுகளில் கொலை செய்யப்பட்ட கனடியர்களின் புள்ளிவிவரங்களை நாடுகளின் பட்டியலோடு வெளியிட்டுள்ளது. கனடாவில் இருந்து வெளியேறி பிற நாடுகளுக்கு பயணம் செய்த கனடியர்கள் பல்வேறு வழக்குகளில் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து வருடங்களில் 200 கனடியர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

மெக்சிகோவில் மற்ற நாடுகளை விட அதிகமான கனடியர்கள் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.பிற நாட்டின்பருவநிலை கவர்ச்சியால் ஈர்க்கப்பட்ட சுற்றுலா பயணிகளின் கொலைகள், மிரட்டி வழிப்பறி செய்தல் முதல் துப்பாக்கிச்சூடு வரையிலான வழக்குகளில் கொல்லப்பட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 190 கனடியர்கள் 63 அயல்நாடுகளில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டில் 49 பேரும், 2017இல் 45 பேரும் , 2018 ஆம் ஆண்டில் 39 பேரும், 2019 ஆம் ஆண்டில் 31 பேரும் ,2020 ஆம் ஆண்டில் 27 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.

ஐந்தாண்டுகளில் கொல்லப்பட்ட கனடியர்களின் எண்ணிக்கை வாரியாக ஐந்து நாடுகள் முன்னணி வகிக்கின்றன. மெக்சிகோவில் 24 கனடியர்கள், அமெரிக்காவில் 20,ஜமைக்காவில் 15 ,மேற்கு ஆப்பிரிக்காவில் 10 கனடியர்கள் மற்றும் பிலிப்பைன்சில் 11 கனடியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது புள்ளிவிவரங்கள் வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவில் எந்த ஒரு கனடியர்களும் கொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஐந்து வருடங்களில் 6 கனேடியர்கள் கொலை செய்யப்பட்டனர். ஜெர்மனி மலேசியா இத்தாலி ஆகிய நாடுகளில் ஐந்து வருடங்களில் 1 கனடியர் கொலை செய்யப்பட்டுள்ளார்