முகக் கவசம் அணிந்தால் நீடிக்குமா? – கனடிய மக்களுக்கு வழிகாட்டுதல்களை அறிவித்த அரசாங்கம்

Canada Tamil News

கனடாவில் மீண்டும் பல்வேறு மாகாணங்களிலும் Covid-19 வழக்குகள் அதிகரித்து வருகின்ற நிலையில் அச்சுறுத்தலான ஓமிக்ரோன் மாறுபாடு பரவுவதை கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் தெரசா டாம் கூறினார்.

கடந்த வாரம் கனடாவில் நாளொன்றிற்கு பதிவாகிய புதிய கோவிட்-19 வழக்குகள் 5000 ஆக இருந்தது. ஆனால் புதன்கிழமை நாடு முழுவதும் 11,300 க்கும் மேற்பட்ட covid-19 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று மருத்துவர் தெரசா கூறினார்.

கியூபெக் மாகாணத்தில் covid-19 நோய்த்தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் மாகாண முதல்வர் பிரான்கோயிஸ் லெகால்ட் புதன்கிழமை அன்று சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அதிகரித்தார். கியூபெக் மாகாணத்தில் அன்று 9000 covid-19 வழக்குகளை உறுதிப்படுத்தியதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

50 சதவீத திறனுடன் இயங்கிவரும் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் ,உணவகங்கள் போன்றவை இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் முறையான சமூக இடைவெளியை பின்பற்றி வாடிக்கையாளர்கள் உணவருந்த வேண்டும் என்று உணவக உரிமையாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பொது நிகழ்ச்சிகள், கூட்டங்கள் போன்றவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள.மக்களை அச்சுறுத்தி வரும் ஓமிக்ரோன் மாறுபாட்டில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் தனிமனித சுகாதாரம் போன்றவற்றை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.