மணிதொபா மருத்துவர்கள் எச்சரிக்கை – பொது முடக்கம் அறிவிப்பதற்கு வலியுறுத்தல்

lockdown
corona case canada

கனடாவின் மணிதொபா மாகாண மருத்துவர்கள் Covid-19 வைரஸ் தொற்றினை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளனர். கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் Covid-19 வழக்குகள் அதிகரித்து வருவதால் மாகாண அரசாங்கம் Covid-19 வைரஸ் தொற்று பாதிப்புகளுக்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மணிதொபா மாகாணத்தில் திங்கள் கிழமை அன்று புதிய covid-19 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் லேசானவை மேலும் எதிர்வரும் வாரங்களில் வைரஸ் தொற்றினால் மருத்துவமனையில் கூட்டங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மணிதொபா மாகாணத்தின் மருத்துவ நிபுணர்கள் கட்டுப்பாடுகள் போதாது என்று தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய மூன்று தினங்களில் மணிதொபா மாகாணத்தில் எட்டு பேர் covid-19 வைரஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.மேலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட Covid-19 வழக்குகள் பதிவாகியுள்ளன

வீரியமிக்க ஓமிக்ரோன் மாறுபாடு மற்றும் Covid-19 வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கட்டுப்பாடுகள் மட்டுமின்றி பொது முடக்கம் தேவைப்படுகிறது. ஆனால் மாகாண அரசாங்கம் பொது முடக்கத்தை ஏன் இன்னும் அறிவிக்கவில்லை என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

மணிதொபா மாகாணத்திற்கு தீவிர சிகிச்சை பிரிவு செவிலியர்கள் 8 பேர் கனடிய செஞ்சிலுவை சார்பாக எட்டு பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.ஆனால் மணிதொபா மாகாணம் 15 லிருந்து 30 செவிலியர்கள் வேண்டுமென கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்