மேய்ச்சல் நிலத்தில் இரண்டு குதிரைகளுக்கு நேர்ந்த சோகம் – உரிமையாளர்கள் வேதனை

Alberta politicians
The Alberta Legislature in Edmonton, Alberta on Friday March 28, 2014. THE CANADIAN PRESS/Jason Franson

ஆல்பர்ட்டாவின் சுந்த்ரே நடுப்பகுதியில் பசுமையான மேய்ச்சல் நிலம் உள்ளது. மேய்ச்சல் நிலங்களில் அதிக மதிப்புள்ள இரண்டு குதிரைகள், ஐயன் டிப்டன் மற்றும் அவரது தோழரான லிசா பிளான்ஷார்ட் பயிற்சி அளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன.

சுந்த்ரேவின் மேற்குப் பகுதியிலிருந்து புயல் ஒன்று உருவாகியது. பலத்த காற்றுடன் கனமழை ஆரம்பித்தது. இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மழையின் போது ஏற்பட்ட மின்னல்கள் பகுதியிலுள்ள வீடுகள் மற்றும் மேய்ச்சல் நிலங்களை சேதத்திற்கு உள்ளாக்கியது. பலத்த காற்றின் போது மேய்ச்சல் நிலங்களில் இருந்த 2 உயர் மதிப்புள்ள குதிரைகள் மின்னல் தாக்கி உயிரிழந்தன. அப்பகுதியில் மொத்தம் 14 குதிரைகள் பயிற்றுவிக்கப்பட்டு வந்தன.

மின்னலினால் தாக்கப்பட்டு அவற்றில் இரண்டு குதிரைகள் உயிர் இழந்துவிட்டன என்று டிப்டன் செய்தியாளர்களிடம் கூறினார். பலத்த காற்று மற்றும் மழை நின்றவுடன் மேய்ச்சல் நிலத்திற்கு அருகிலேயே இரண்டு குதிரைகளையும் புதைத்து விட்டதாக தெரிவித்தார்.

பயிற்றுவிக்கப்பட்டு வந்த 14 குதிரைகளில் இந்த இரண்டு குதிரைகள் சிறப்பு வாய்ந்தவை என்று குறிப்பிட்டார். பயிற்சியிலிருந்து விடைபெற்று இரண்டு குதிரைகளும் தற்பொழுது நிரந்தரமாக ஓய்வெடுக்க சென்று விட்டன என்று கூறினார்.

இறந்த இரண்டு குதிரைகளின் பெயர்கள் சிபாடோ மற்றும் ஜெசின்டோ ஆகும் .கடந்த 50 ஆண்டு காலங்களாக குதிரைகளுடன் டிப்டன் பணிபுரிகிறார். அந்த குதிரைகள் ஒரு நொடி கூட அவரை விட்டுப் பிரிந்தது இல்லை என்று கூறினார்.

இறந்த இரண்டு குதிரைகளும் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் போன்றவை என்று பிளான்சார்ட் கூறினார். குதிரைகளின் மரணம் தொழில் ரீதியாக மட்டுமின்றி தனிப்பட்ட உணர்வு ரீதியாக எங்களைப் பாதித்துள்ளது என்று தெரிவித்தனர்.இரண்டு குதிரைகளும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.