ஒன்ராறியோ ஓசாவா அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து! நடுத்தெருவில் தஞ்சம் புகுந்த பொதுமக்கள்!

922 Glen Street
Fire crews are seen outside 922 Glen Street after a major fire at an apartment building.

கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் உள்ள ஓசாவா நகரில் பெரும் தீ விபத்து நடந்துள்ளது. ஓசாவா நகரில் 922 கிளன் தெருவில் உள்ள மூன்று மாடி குடியிருப்பு கட்டிடத்தில் வியாழக்கிழமை இரவு ஒரு மணி அளவில் தீப்பற்றி உள்ளது.

குடியிருப்புகளில் இருந்த மக்கள் உடனடியாக தீயணைப்பு மையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க விடாது முயற்சித்தனர்.

முதலாவதாக குடியிருப்பின் இரண்டாவது மாடியிலிருந்து தீ பற்றி எரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க தொடர்ந்து முயற்சித்த போதும் இரண்டாவது மாடியில் மட்டும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

பின்னர் சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு சரியாக மூன்று மணி அளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் தீயணைப்புத் துறையினர்.

வியாழக்கிழமை அன்று ஏற்பட்ட இந்த கொடூர தீ விபத்தில் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருக்கின்றனர்.

ஒருவர் புகையால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

நடு இரவில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு குடியிருந்த குடியிருப்புவாசிகள் வீடுகளை இழந்து சாலைகளில் தஞ்சம் அடையும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கின்றனர்.

தீயணைப்புத்துறை தலைவர் தீ விபத்தில் உயிர் இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சிறிது காயம் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியிட்டுள்ளார்.

மேலும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் விசாரணையில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.