ஜஸ்டின் ட்ரூடோ -பணியிடங்களில் Covid-19 தடுப்பூசி மருந்துகளை கட்டாயமாக்க பரிசீலனை

கனடாவின் மாகாணங்கள் முழுவதிலும் covid-19 கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி மருந்துகள் விரைவாக மாகாணம் முழுவதுமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன .இருப்பினும் தினசரி covid-19 வைரஸ் தொற்றுக்கள் பதிவாகி வருகின்றன. எனவே கனடாவில் தடுப்பூசி மருந்துகள் அளவை அதிகரிக்க கூட்டாட்சி பணியிடங்களுக்கு covid-19 தடுப்பூசி மருந்துகளை கட்டாயமாக்க இருப்பதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

கனடாவில் covid-19 பூஸ்டர் தடுப்பூசி மருந்துகளை பயன்படுத்துவதை சிறிது தாமதப்படுத்தலாம் என்று பிரதமர் கூறுகிறார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் இந்த வாரம் பூஸ்டர் தடுப்பூசிகள் குறித்து கோரிக்கை விடுத்திருந்தார். அதாவது உலகின் பல்வேறு நாடுகளும் தடுப்பூசி மருந்துகளை பெறும்வரை கனடாவில் பூஸ்டர் மருந்துகளை தாமதப்படுத்தலாம் என்பதாகும்.

கனடாவில் குழந்தைகள் பராமரிப்பிற்காக சுமார் 6 பில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தை வியாழக்கிழமையன்று மொன்றியலில் அறிவித்தார். கியூபெக் முதல்வர் பிராங்கோயிஸ் லஹால்ட் மாகாணத்தில் தேவையற்ற சேவைகளுக்கு தடுப்பூசி பாஸ்போர்ட் விதிப்பதாக தெரிவித்தார்.

உள்நாட்டில் தடுப்பூசி பாஸ்போர்ட் பயன்படுத்துவதற்கு ஆரம்பத்தில் பிரதமர் ட்ரூடோ தயக்கம் காட்டினார். ஆனால் கியூபெக் திட்டத்தை முழுமையாக ஆதரித்தார். கனடாவில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் கட்ட தடுப்பூசி மருந்துகளை பெற்றவர்களின் சதவிகிதம் 82 ஆக உள்ளது. 69% கனடியர்கள் இரு தடுப்புசி மருந்துகளையும் பெற்றுள்ளனர்.6 மில்லியன் கனடியர்கள் covid-19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

அலுவலகங்களில் மக்கள் மீண்டும் பணி புரிய வேண்டுமென்றால் அனைவரும் தடுப்பூசி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது