இந்த சூழலில் கனடாவில் தேர்தல் நடத்தப்படுகிறதா? பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

trudeau
Generations of Asian Canadians helped build Canada

கனடா முழுவதும் covid-19 வைரஸ் தொற்று மூன்றாவது அலையாக தீவிரமாக பரவி வருகிறது.

இந்நிலையில் கனடாவின் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் எதுவும் தற்பொழுது எடுக்கப்படவில்லை.

அனைத்து மாகாணங்களிலும் covid-19 வைரஸ் தொற்று அதிதீவிரமாக பரவி வருவதால் இத்தகைய சிக்கலான தருணத்தில் தேர்தல் ஒன்றை நடத்தி மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்த திட்டமில்லை என்று  பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அறிவிப்பினை லிபரல் கட்சியின் மூன்று நாள் மாநாடு ஒன்றினை தொடங்கி வைத்து உரையாற்றும் பொழுது வெளியிட்டுள்ளார்.

தற்பொழுதைய நிலையில் லிபரல் கட்சியில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் மீண்டும் ஒருங்கிணைத்து செயல்பட செய்வதே தனது நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

கட்சியின் உறுப்பினர்கள் அனைவரையும் தாராளவாதிகள் என்றும் இவர்களை ஒருங்கிணைப்பதன் மூலம் தனது இலக்குகளை விரைவில் அடைய முடியும் என்றும் பிரதமர் ட்ரூடோ அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதேவேளையில் லிபரல் கட்சியின் ஆட்சியிலுள்ள அரசாங்கமானது கனடாவில் தற்பொழுது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையை வினை மிக்க செயல்களோடு வழி நடத்திச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொருளாதார நிலையில் மேலும் தன்மையை ஏற்படுத்த பல்வேறு திட்டங்களை தன் கைவசம் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களின் இந்த அறிவித்தல் ஆனது ஒரு தேர்தல் மேடைப்பேச்சு போன்று இருப்பதாகவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.