தென்னாப்பிரிக்காவிலிருந்து கனடாவிற்கு திரும்பும் ஹாக்கி வீரர்கள் – பயண விலக்கு அளித்தது கனடிய அரசு

canADA HOCKEY TEAM

Omicron மாறுபாடு அச்சுறுத்தல் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கனடிய அரசாங்கம் பயண தடையை அறிவித்துள்ளது.ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்காவிற்கு சென்ற கனடிய ஹாக்கி வீரர்கள் covid-19 பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கனடாவிற்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

தென்னாப்பிரிக்காவில் வீரர்கள் சிக்கியுள்ள தகவல்களை அவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் ,கனடிய அரசாங்கம் தனது இணையதளத்தில் ஹாக்கி வீரர்களுக்கு சனிக்கிழமை அன்று விலக்கு அளித்தது. மத்திய அரசிடம் இருந்து விலக்கு பெற்ற ஹாக்கி வீரர்கள் டிசம்பர் 8-ஆம் தேதி கனடாவிற்கு திரும்ப உள்ளனர்.

ஜூனியர் தேசிய மகளிர் அணி பங்கேற்க இருந்த உலககோப்பை போட்டி Omicron மாறுபாடு பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. கனடிய அரசாங்கம் விமானங்களை ரத்து செய்ததால் 21 ஹாக்கி வீரர்கள் மற்றும் 5 பயிற்சியாளர்கள் தங்களது வீட்டிற்கு திரும்ப வழி இல்லை.

ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து ஜெர்மனி வழியாக கனடாவிற்கு செல்வதற்கு கனடிய அரசாங்கம் விலக்கு அளிப்பதற்கு முன்னதாக ஹாக்கி அணி முன்பதிவு செய்திருந்தது. மூன்றாவது நாட்டில் கனடாவுக்கு எதிர்மறையான பிசிஆர் பரிசோதனை தேவைப்படுவதால் குழு விமானத்தில் ஏற முடியாது.

” ஹாக்கி குழுவினருக்கு மட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்காவில் உள்ள அனைத்து கனடியர்களுக்கும் ஒரு பெரிய நிவாரணம் ” என்று அணியின் மேலாளர் நான்சி கூறினார். தற்காலிக விலக்குகள் காரணமாக கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு வீட்டிற்கு வர மாட்டார்கள் என்று வீராங்கனைகளின் பெற்றோர் கவலை தெரிவித்தனர்.