இதற்கு பிறகு ரொரண்டோவின் நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும் – மேயர் ஜோன் டொரி அறிவிப்பின் பின்னணி!

john-tory
Toronto residents who are desperately hoping

டொரண்டோ பகுதியில் தடுப்பூசி மருந்து விநியோகித்தலுக்காக மூன்று புதிய மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன.

மெட்ரோ டொரன்டோ மாநாடு மையம், ஸ்கார்பாரோ டொரன்டோ நகர மையம்,மற்றும் டொரன்டோ காங்கிரஸ் மையம் என 3 மையங்களில் covid-19 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த மூன்று மையங்களும் இன்று திறக்கப்பட்டது. மூன்று மையங்களும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை வாரத்தின் ஏழு நாட்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும்.

மூன்று மையங்களிலும் தற்பொழுது 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி மருந்துகள் முன்பதிவின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன.

ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் மேலும் 3 மருத்துவமனைகள் திறக்கப்படும் என திங்கட்கிழமையன்று மேயர் ஜான் டோரி தகவலை வெளியிட்டுள்ளார்.

மேல்வன் கம்யூனிட்டி மறு உருவாக்க மையம், மிச்சல் பீல்டு கம்யூனிட்டி மையம் ஆகிய இரு மருத்துவமனைகளும் மார்ச் 29 ஆம் தேதி அன்று திறக்கப்பட உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் ஐந்தாம் தேதி அன்று விளையாட்டு மற்றும் நிகழ்ச்சி மையங்கள் திறக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

ரொரண்டோவில் 27 இடங்களில் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்தும் பணியை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக  மேயர் ஜோன் டொரி (JHON TORY) தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ரொரண்டோவின் நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் வருமென்று நம்புவதாகவும் கூறினார்.