அடேயப்பா! எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா? கனேடிய பெண் மீது 399 குற்றச்சாட்டுகள்!

Jane Moore
Jane Moore has pleaded guilty to defrauding people between 2016 and 2017. She originally faced 399 charges. (Left, Rick McDonough/right, Crime Stoppers)

தனக்கு 38 மில்லியன் டாலர் பணம் கிடைக்க இருப்பதாக பொய் கூறிய பெண்ணை நம்பி கனேடிய மக்கள் பலர்  ஏமாந்த சம்பவம் ஒன்று கல்கரியில் நடைபெற்றுள்ளது.

Jane Moore என்ற 45 வயதான பெண், தான் கால்கரியில் ஒரு செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்றும், தனக்கு 38 மில்லியன் டாலர்கள் குடும்பச் சொத்து தனக்கு கிடைக்க இருப்பதாகவும் கூறி மக்களை ஏமாற்றியுள்ளார்.

அவர் சொன்ன கதையை உண்மை என நம்பிய மக்கள் அவருக்கு கடன் கொடுக்க, பல ஆயிரம் டாலர் மோசடி செய்துவிட்டார் Jane Moore.

இதனை தொடர்ந்து Jane Moore மீது 399 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் 5,000 டாலர்களுக்கு மேல் மோசடி செய்த ஒரே ஒரு குற்றத்தை மட்டும் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே அவருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட நிலையில், மூன்று மாதங்கள் வீட்டுச்சிறையிலும், ஆறு மாதங்கள் கண்காணிப்பிலும் வைக்கப்பட உள்ளார்

அத்துடன், அவர் அவரால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு 40,000 டாலர்களை திருப்பிச் செலுத்தவேண்டும்.

Jane ஏற்கனவே 17 ஆண்டுகளுக்கு முன் 77 மோசடி குற்றங்கள் மற்றும் திருட்டு தொடர்பான குற்றங்களுக்காக இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க: கனடாவில் உடல் சிலிர்க்க வைக்கும் சம்பவத்தை செய்த தமிழர்! டொராண்டோ காவல் துறை வெளியிட்ட பகீர் வெளியிட்ட அறிக்கை!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.