ஈரானின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட விமானம் – வழக்கில் வென்றதால் கனடிய குடும்பங்கள் மகிழ்ச்சி

iran missile plane accident

உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் PS752 தரையில் இருந்து புறப்பட்டு உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது இரண்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டு விபத்துக்கு உள்ளானது.இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 176 பயணிகளும் உயிரிழந்தனர்.

விமானத்தின் மீது தாக்குதலை ஏற்படுத்திய ஏவுகணைகளை அமெரிக்காவின் ஏவுகணைகள் என்று தவறாக கூறியதாக ஈரான் தெரிவித்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் கனடியர்கள் பலர் பயணித்துள்ளனர்.
ஏவுகணைகளால் தாக்கப்பட்ட விமானத்தில் 55 கனடியர்களும் ,35 கனடிய நிரந்தர குடியிருப்பாளர்களும் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் ஈரான் மீது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர்

விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இழப்பீடாக ஈரானிடமிருந்து பணத்தை எப்படி வசூலிப்பது என்ற குழப்பத்தில் இருந்தனர்.உறவினர்களின் வழக்கறிஞர் மார்க் அர்னால்ட் கனடா மற்றும் அயல்நாடுகளில் உள்ள ஈரானிய சொத்துக்கள் மற்றும் எண்ணெய் கிடங்குகள் போன்றவற்றை கைப்பற்றுவதற்கு அவரது குழு தயார் செய்யப்படும் என்று கூறினார்.

விமானம் தாக்கப்பட்டதற்கு பொறுப்பற்ற தன்மை காரணமாகும் என்றும் ஈரான் முழு பொறுப்பு என்றும் கனடிய அரசாங்கத்தின் கடந்த ஆண்டு அறிக்கையில் வெளியிடப்பட்டது. 2020ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி ஏற்பட்ட விமான விபத்திற்கு ஈரான் தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது ஈரான் மறுத்து வந்தது. ஆனால் ஆதாரங்கள் வலுத்து வந்ததால் ஈரான் இசைந்து கொடுத்தது.

நீதிமன்றத்தின் ஆணைப்படி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒன்ராறியோவின் உயர்நீதிமன்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்குவது இதுவே முதல்முறையாகும்