சர்வதேச பயணிகள் கனடாவிற்குள் நுழைய அனுமதி – முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தடையில்லை

canada-watching-covid-19-surge

கனடிய அரசாங்கம் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட அமெரிக்கர்களை கனடாவிற்குள் நுழைய அனுமதி அளித்திருந்தது. மத்திய அரசாங்கம் ஊரடங்கு தளர்த்தி பல்வேறு துறைகளையும் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளித்து அறிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி , உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகள் கனடாவிற்குள் நுழைவதற்கு தடையை நீக்கி அனுமதி அளித்து எல்லைகளை திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் நுழைந்த பின்பு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் விதிமுறையானது அவசியமில்லை என்று கூறியுள்ளது.

Covid-19 வைரஸ் பெரும் தொற்று உலக நாடுகள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியதிலிருந்து சர்வதேச பயணிகள் கனடாவிற்குள் நுழைவதை தடை செய்து விமான சேவையை ரத்து செய்திருந்தது. தற்பொழுது விதிகள் மாற்றப்பட்டு முழுமையாக covid-19 தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் கனடாவிற்குள் நுழைய தடையில்லை என்ற அறிவிப்பு சர்வதேச பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

கனடிய அரசாங்கம் கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட அமெரிக்கர்களை எல்லைக்குள் நுழைய அனுமதித்து இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச பயணிகளை கனடாவிற்குள் நுழைய அனுமதிக்கும் தொடக்க தேதியாக செப்டம்பர் ஏழாம் தேதி இருக்கும் என்று அரசாங்கம் கூறியிருந்தது. தற்பொழுது (CBSA) கனடா எல்லை சேவை நிறுவனம் செப்டம்பர் ஏழாம் தேதி அன்று கனடாவிற்குள் சர்வதேச பயணிகள் நுழையலாம் என்று உறுதி செய்து அறிவித்துள்ளது .(CBSA)-ன் இந்த அறிவிப்பு ஏற்கனவே, கனடாவிற்குள் நுழைய திட்டமிட்டிருந்த பயணிகளுக்கு நிவாரணமாக இருக்கிறது.

தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் , பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் விதிமுறைகள் கடைபிடிக்காமல் இருந்தால், மாத இறுதிக்குள் கனடாவின் ஒருநாளில் பதிவாகும் covid-19 வழக்கு எண்ணிக்கை 15,000-ஐ அடையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.