தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள covid-19 நோயாளிகள் -ஒன்டாரியோ சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள்

credit-cp24 corona virus update

ஒன்ராரியோ மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளின் விகிதங்கள் தினசரி அதிகரித்து வருகின்றன. புதன்கிழமை மட்டும் 500 பேர் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒன்ராறியோவில் தினசரி covid-19 வழக்குகளின் எண்ணிக்கை வாரம்தோறும் அதிகரித்து வருகிறது.

கடந்த புதன்கிழமை அன்று covid-19 வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 454 ஆக இருந்தது. இந்த வார செவ்வாய்க்கிழமை 481 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த வாரத்தில் ஏழு நாள் சராசரி 502 ஆக இருந்தது. ஆனால் இந்த வாரத்திற்கான ஏழு நாள் சராசரி 587 ஆக அதிகரித்துள்ளது

சுமார் 28,931 covid-19 பரிசோதனைகள் கடந்த 24 மணி நேரத்தில் செயல் ஆக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகளில் நேர்மறை விகிதமாக 2.5 சதவீதங்கள் புகார் அளிக்கப்பட்டுள்ளன. ஒரு வாரத்திற்கு முன்பு 1.8 சதவீதமாக நேர்மறை முடிவுகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒன்டாரியோ மாகாணம் முழுவதும் பதிவாகியுள்ள covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் 4741 ஆக உள்ளது. கடந்த வாரம் 4,053 வழக்குகள் இருந்ததாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. Covid-19 வைரஸ் தொற்றினால் இன்று 12 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஒன்டாரியோ மாகாணத்தின் மருத்துவமனைகளில் 133 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு விரைவில் PCR பரிசோதனைகள் எடுக்கப்படும் என்று மூத்த அரசாங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

டொரன்டோவில் 54,சிம்கோ- முஸ்கோகா பகுதியில் 49,ஒட்டாவாவில் 43,மற்றும் பீல் பிராந்தியத்தில் 26 covid-19 வழக்குகளும் பதிவாகியுள்ளன.