கனடிய பிரதமரை விமர்சனம் செய்யும் இந்திய நெட்டிசன்கள் – வேளாண் சட்டத்தை எதிர்த்துப் போராடிய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் தலைமறைவு

indian memers criticise trudeau

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையில் எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக கட்டாயமாக தடுப்பூசி போட வேண்டும் என்று கனடாவின் லிபரல் அரசாங்கம் அறிவித்திருந்தது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுனர்கள் தலைநகர் ஒட்டாவாவில் பேரணி நடத்தி வருகின்றனர்.

Covid-19 தடுப்பூசி ஆணைக்கு எதிராக தலைநகர் ஒட்டாவாவில் நடைபெறும் போராட்டம் வலுத்து வரும் நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமறைவாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருகின்றன.எதிர்ப்பாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினர் ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் .

பிரதமரின் ஆணையை எதிர்த்து போராட்டக்காரர்கள் அனைவரும் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்து “Freedom Convoy” என்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய நெட்டிசன்கள் “இதுதான் கர்மா “என்று கனடிய பிரதமரை விமர்சித்துள்ளனர்.

இந்தியாவில் மத்திய அரசாங்கத்தின் வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தை கனடிய பிரதமர் ஆதரித்தார். ஜஸ்டின் ட்ரூடோவின் அந்த செயலுக்கான பலனைத்தான் தற்போது அனுபவிப்பதாக இந்திய நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர்

இந்தியாவில் பாஜக அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ,தற்பொழுது தனது நாட்டில் மக்கள் பேரணியாக திரண்டு போராட்டத்தை நடத்தும் பொழுது பயந்து தலைமறைவாகி விட்டதாகவும் இணையதளங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன