இந்தியா – கனடா செல்லும் பயணிகளுக்கு நற்செய்தி ;டிக்கெட்டுகளின் விலை குறைப்பு

canada top 10 billionaires 2019
canada top 10 billionaires 2019

Covid-19 நோய்த்தொற்று காரணமாக கனடா பன்னாட்டு விமான சேவையை ரத்து செய்து இருந்தது. உலகின் பல்வேறு நாடுகளிலும் covid-19 வைரஸ் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உருவான டெல்டா மாறுபாடு காரணமாக மூன்றாவது அலையின் போது இந்திய மக்கள் வைரஸ் தொற்றால் அதிக அளவு பாதிக்கப்பட்டு மரணமடைந்தனர்.

இந்தியாவுடனான விமானச் சேவையை தற்காலிகமாக கனடா உட்பட பல்வேறு நாடுகளும் தடை செய்திருந்தது. முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட அமெரிக்கர்களை ஆகஸ்ட் மாதம் கனடாவிற்குள் நுழைய கனடாவின் எல்லை சேவை அமைப்பு மற்றும் மத்திய அரசாங்கம் அனுமதி அளித்தது. தற்பொழுது, இந்தியாவில் covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இந்தியர்கள் மூன்றாவது நாட்டின் வழியாக கனடாவிற்கு பறக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் ஏழாம் தேதி முதல் அபுதாபி, துருக்கி மற்றும் துபாய் போன்ற மத்திய கிழக்கு பகுதிகளை பயன்படுத்தி கனடாவிற்குள் நுழையலாம்.மூன்றாவது நாட்டில் RT-PCR பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள அபுதாபி போன்ற நாடுகளின் விமான நிலையங்கள் வைரஸ் தொற்று காரணமாக பல மாதங்களாக இந்தியர்களுக்கு தடை செய்யப்பட்டிருந்தது. எனவே இந்தியாவிலிருந்து கனடாவிற்கு செல்ல விரும்பும் நபர்கள் மெக்சிகோ மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் வழியாக செல்வது தான் ஒரே வழியாக இருந்தது. கனடாவிற்கான் டிக்கெட்டுகளின் விலை கணிசமாக குறைந்து விட்டது.

மூன்றாவது நாடுகளின் வாயிலாக இந்தியாவிலிருந்து கனடாவிற்கு பறக்கலாம். லண்டன் வழியாக மும்பை – டொரன்டோ பயணத்திற்கான டிக்கட்டுகளின் விலை 80,000-90,000 வரை செலவாகும்.

இந்தியா – கனடா பயணத்திற்கான கட்டுப்பாடுகள் :

  • Covid-19 தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்
  • 72 மணி நேரத்திற்கு முன்பு RT-PCR பரிசோதனை எடுத்திருக்க வேண்டும்
  • தொற்று நோய்க்கான அறிகுறியற்றவர்களாக இருக்க வேண்டும்
  • கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட covishield தடுப்பூசி மட்டுமே போட்டிருக்க வேண்டும்
  • வருகை மற்றும் கட்டாய தகவல்களை CAN பயன்பாட்டில் சமர்ப்பிக்க வேண்டும்