அஸ்திரா ஜெனிகா தடுப்பூசி தொடர்பான குழப்பத்திற்கு கனடா வைத்த முற்றுப்புள்ளி!

vaccine
Canada recommends vaccine

கனடாவின் ஒட்டாவா மாகாணத்தில் அஸ்திரா ஜெனிகா தடுப்பூசி மருந்துகளானது மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது என்று தேசிய ஆலோசனைக் குழு கருத்து தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் இதற்கு எடுத்துக்காட்டாக அமையும் என்றும் கூறியுள்ளது.

அதாவது உலகின் பல்வேறு நாடுகளிலும் அஸ்திரா ஜெனிகா தடுப்பூசி மருந்து மூத்த வயதினர் அனைவருக்கும் வழங்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மூத்த வயதினர் எந்த ஒரு உடல் உபாதைகள் இல்லாது நலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அதனால் உலக நாடுகளின் மத்தியில் அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி மருந்து நம்பகத்தன்மையையும் பெரும்பான்மையானோரால் பரிந்துரைக்கப்படுகிறது.

இவ்வாறு ஒட்டாவா மாகாணத்தில் தேசிய ஆலோசனைக் குழு அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அஸ்ரா ஜெனிகா மருந்தானது covid-19 வைரஸ் தொற்றுக்கு சிறந்த எதிர்ப்பு மருந்தாகவும் செயல்படுவதால் நோயாளிகள் விரைவில் குணமடைந்து விடுவதாகவும் பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.

இருப்பினும் ஒரு சில உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி மருந்துகள் அஸ்திரா ஜெனிகா தடுப்பூசி மருந்தை விட அதிக சக்தி வாய்ந்தது எனவும் நோயாளிகளுக்கு விரைவில் பயனளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

இதனைப் போலவே ஐரோப்பிய ஐக்கிய நாடுகள், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அஸ்திரா ஜெனிகா பற்றி கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது