மனிதர்களுக்கு நோய் பாதிப்பு – கனடாவில் வெப்பநிலை உயர்வால் உயிரிழந்த கனடியர்கள்

Toronto Doctors

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் மூச்சுத்திணறல் உடன் மருத்துவமனையில் நோயாளி அனுமதிக்கப்பட்டுள்ளார். நோயாளி பரிசோதித்த மருத்துவர் ” காலநிலை மாற்றத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது ” என்று கண்டறிந்துள்ளார். காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகிய முதல் வழக்கு இதுவாகும்.

சுமார் 1600 காட்டுத்தீகள் இந்த நிதியாண்டில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள kootenays பகுதியில் ஏற்பட்டுள்ளன. காலநிலை மாற்றத்தால் பிரிட்டிஸ் கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிக உமிழ்வு காரணமாக வெப்பநிலை அதிகரித்துள்ளதால் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய நோய்கள் ஏற்படுகின்றன.மனிதர்களுக்கு இதயம் செயலிழப்பு, நீரிழிவு மற்றும் பல்வேறு உடல் உபாதைகள் வெப்ப உயர்வால் ஏற்படுவதாக அவசர அறை பிரிவின் தலைவர் மற்றும் மருத்துவரான மெரிட் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் லிட்டன் பகுதியில் ஜூன் மாத வெப்பநிலை 49.6 டிகிரி செல்சியஸ் ஆக தொடர்ந்து பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. கனடாவின் வெப்பநிலை பதிவுகளை முறியடித்த வெப்ப தாக்கத்தின் காரணமாக 100க்கும் மேற்பட்ட கனடியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்து நடத்தும் காலநிலை மாநாட்டில் ,காலநிலை மாற்றத்திற்கான உலகலாவிய பதிலை வலுப்படுத்துவதற்காக தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் தலைவர்கள் ஒருங்கிணைந்து உள்ளனர். ஆனால் அறிவிக்கப்பட்ட ஒப்பந்தங்களும் அறிக்கைகளும் மாற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வலுவானதாக இல்லை என்று ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.