கனடாவில் 1988க்கு பிறகு பதிவான உச்சபட்ச வெப்பநிலை – சுற்றுச்சூழல் கனடாவின் சமீபத்திய அறிவிப்பு!

heatwave
heat wave alert canada

கனடாவில் கோடை காலம் நிலவி வருவதால், பல மாகாணங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது.

ஒட்டாவாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெப்பநிலை 30° C க்கு மேல் நிலவி வந்ததாக சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது. தற்போது  வெப்ப எச்சரிக்கையை முடித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 36.9° C வெயில் சுட்டெரித்தது. இந்த அளவு ஒட்டாவா விமான நிலையத்தில் கடந்த 1988 இல் பதிவான சாதனை அளவான 34.3 ° C காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை 26° C அளவு வரைக்கும் வெப்பநிலை மிக லேசான உயர்வை சந்தித்தது. ஆனால் பெரிய அளவில் அதிகம் உச்சநிலை பெறவில்லை.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms