கனடாவில் விற்கப்படும் முகக்கவசங்களில் கிராபென் நச்சு – ஹெல்த் கனடா வெளியிட்ட எச்சரிக்கை!

canada job
Canada posted its first monthly decline in jobs since April

ஹெல்த் கனடா ஒரு குறிப்பிட்ட வகை முகக்கவசப் பொருட்களுடன் தொடர்புடைய சுகாதார அபாயங்கள் குறித்த ஒரு ஆலோசனையை வெளியிட்டது.

முகக்கவசத்தில் உள்ள துகள்களை உள்ளிழுக்கும் அபாயத்தின் காரணமாக, முகக்கவசங்களை பயன்படுத்துவதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிராபெனை ஒரு நானோ பொருளாக ஹெல்த் கனடா விவரித்துள்ளது. இது வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கிடைக்கக்கூடிய ஆராய்ச்சிகளின் படி, கிராபெனுக்கு விலங்குகளில் நுரையீரல் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. ஆனால் மனிதர்களுக்கான ஆபத்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஹெல்த் கனடா அதன் பாதுகாப்பு மதிப்பீட்டை நிறைவு செய்து கிராபெனின் கொண்ட முகக்கவசகள் திரும்ப அழைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

அவை இனி விநியோகிக்கப்படாது அல்லது விற்கப்படாது. இந்த முகக்கவசகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

எந்தவொரு உடல்நலக் கவலைகள் குறித்தும் அவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநரை அணுகும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், சாதாரண முககவசங்கள் மற்றும் அங்கீகாரமற்ற முககவசங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த வகையான முககவசங்கள், சிறிய துணிக்கைகளை உட்புக இடமளிக்கும் என்ற காரணத்தினால் அவற்றை பயன்படுத்தாது தவிர்ப்பதே நல்லது என்றும் கனடிய சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இத்தகைய முககவசங்கள் விற்பனை செய்ப்படுவது தொடர்பில் உரிய ஆய்வுகள் நடத்தப்பட்டு அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கனடிய சுகாதரத்துறை மேலும் வலியுறுத்தியுள்ளது.