டொராண்டோவில் மக்கள் அவசரகால விதிமீறல்..! 25 பேரை சுற்றி வளைத்த காவல்துறையினர்!

Toronto police

கனடாவின் பல்வேறு இடங்களிலும் வீட்டிலேயே தங்கி இருக்கும் நிலை அமலில் உள்ளது.

Covid-19 வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வரை அரசாங்கம் அறிவித்துள்ள அதிரடி விதிமுறைகள் அனைத்தையும் மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இருப்பினும் உள்ளக அரங்கங்களில் மக்கள் கொண்டாட்டத்திற்காக விதிமுறைகளை மீறி சமூக இடைவெளி இன்றி கூட்டம் கூடுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

டொரன்டோ மாகானத்தில் கிங் வெஸ்ட் பகுதிக்கு அருகில் உள்ள விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை பொழுதில் 25 பேருக்கும் மேற்பட்டோர் covid-19 விதிகளை மீறி ஒன்றுகூடி கொண்டாடியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாலை 5:45 மணி அளவில் டொரண்டோவில் கிங் வெஸ்ட் பகுதியிலுள்ள பாரோ விடுதியில் பலர் கூடி கொண்டாடும் நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். த

கவலில் கூறப்பட்டது போல் விடுதியில் 25 பேருக்கும் மேற்பட்டோர் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விடுதியின் நிர்வாகம் 9 அனுமதிச் சீட்டுகளை விதிகளை மீறி விநியோகம் செய்துள்ளது கண்டறியப்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

அவசரகால விதிகளை மீறி விடுதி நிர்வாகம் அனுமதிச் சீட்டுகளை வினியோகம் செய்ததன் காரணமாக நிர்வாகத்தின் மீது சிவில் பாதுகாப்பு செயல் சட்டம் ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும் இந்த தகவல் ஆனது பொது சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

ஏழு மாதங்களுக்கும் மேலாக உள்ளக உணவு விருந்துகளுக்கு டொரன்டோ மாகானத்தில் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் அவசரகால விதிமீறல் செய்தது தண்டனைக்குரிய குற்றமாகும்