அரசின் அசத்தல் திட்டம் – கனடா முழுவதும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களின் சதவீதம் விரைவாக அதிகரிப்பு!

pregnant

கனடாவின் covid-19 வைரஸ் தொற்று பரவுதல் தீவிரமடைந்துள்ள பகுதிகளில் அமைந்துள்ள மருந்தகங்களில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதற்கான தடுப்பூசி மருந்துகள் நிறுவபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் குறித்த அறிவிப்புகள் வெள்ளிக்கிழமை அன்று தடுப்பூசி மருந்துகளுக்கான இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த இணைய பக்கத்தில் தடுப்பு ஊசி மருந்து செலுத்தி கொள்வதற்கான வயதுவரம்பு மாற்ற பட்டதையும் அறிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இணைய பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பதிவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பைசர் பயோடெக் தடுப்பூசி மருந்துகளை டோரன்டோ மாகாணம் மற்றும் பீல் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள மருந்தகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்பொழுது பைசர் பயோடெக் தடுப்பூசி மருந்துகள் ஆனது டொரன்டோ மற்றும் பீல் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 78 மருந்தகங்களில் கிடைக்கப் பெறுவதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் தடுப்பூசி மருந்துகள் விநியோகித்தல் குறித்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

டிராம், ஹாமில்டன், ஒட்டாவா, வின்ஸ்டார் மட்டும் யாக் போன்ற பகுதிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மருந்தகங்களில் மாடர்னா தடுப்பூசி மருந்துகள் 18 வயது மேற்பட்டவர்களுக்கு இந்த வாரத்தின் தொடக்கத்தில் கிடைக்கப்பெறும் என்றும் அறிவித்துள்ளது.

அஸ்திரா ஜெனிகா தடுப்பூசி மருந்து ஆனது ஏற்கனவே 40 வயது மேற்பட்டவர்களுக்கு விநியோகிப்பதற்காக மருந்தகங்களில் கிடைக்கப் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கனடா முழுவதும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களின் சதவீதம் விரைவாக அதிகரிக்கக்கூடும் என்று அரசு தெரிவித்துள்ளது.