டக் போர்ட் ,ஜான் டோரி -டேவிஸ் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கருத்து – பில் டேவிஸ் இயற்கை மரணம்

DOUG FORD
DOUG FORD
இயற்கை மரணம் அடைந்த டேவிஸ் :

ஒன்ராரியோ மாகாணத்தின் முன்னாள் முதல்வர் பில் டேவிஸ் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார். பில் டேவிஸ் பிராம்டன் நகரிலுள்ள அவரது வீட்டில் இருந்தபோது மரணம் அடைந்தார்.இவருக்கு வயது 92 ஆகும்.

ஜார்ஜியன் விரிகுடாவில் உள்ள அனைத்து விருப்பமான இடங்களுக்கும் தனது குடும்பங்களோடு நேரத்தை செலவிட்ட பின்னர் பிராம்டன் பகுதியில் உள்ள வீட்டிற்கு திரும்பினார். குடும்ப உறுப்பினர்கள் அவர் இயற்கையாக மரணமடைந்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

ஜான் டோரி புகழாரம் :

வில்லியம் ஜி டேவிஸ் ஒன்டாரியோ மாகாணத்தின் முதல்வராக 1971 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். சுமார் 14 வருடங்களாக ஒன்டாரியோ மாகாணத்தின் முதல்வராக பணியாற்றியுள்ளார்.
மாகாணத்தின் முதல்வராக பொறுப்பேற்கும் முன்பு கல்வி அமைச்சராகவும் பல்கலைக்கழக அமைச்சராகவும் பணியாற்றினார்.சட்டமன்றத்தில் 1959 ஆம் ஆண்டு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிறிஸ்டின் எலியடின் ஒன்டாரியோ பிசி கட்சித் தலைவராக 2014ஆம் ஆண்டு பணியாற்றினார். இறுதிச் சடங்கு தனியார் முறையாக நடத்தப்படும் என்று செய்தியாளர்களிடம் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
டொரன்டோ முதல்வர் ஜான் டோரி டேவிஸிடம் முன்பு பணியாற்றியதாக கூறினார். தனது வாழ்நாளில் ஒரு சிறந்த வழிகாட்டி மற்றும் அரசியல் நடைமுறைவாதி என்று ஜான் டோரி டேவிஸ் குறித்து தெரிவித்தார்.

ஒன்டாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் டேவிஸ் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். ” மாகாணத்திற்கு கண்ணியம் மற்றும் பொதுநலத்துடன் சேவை செய்தார் ” என்று பதிவிட்டுள்ளார். டேவிஸ் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மாகாண கட்டிடங்களில் உள்ள கொடிகள் அனைத்தும் அரைக் கம்பத்திற்கு கீழாக பறக்கவிடப்படும் என்று அறிவித்தார்.