இனி ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கனேடிய மாகாணம்!

vaccine
Canada recommends vaccine

கனடாவின் அனைத்து மாகாணங்களிலும் முன்பதிவின் அடிப்படையில் தடுப்பூசி மருந்துகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வினியோகிக்க பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் மூத்த வயதினர் அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொண்டனர்.

கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கொரானா வைரஸ் தடுப்பூசி மருந்து விநியோகித்தல் பட்டியல் பற்றிய அறிவிப்பு ஒன்றினை அந்த மாகாணம் வெளியிட்டுள்ளது .

தடுப்பூசி அட்டவணை பட்டியலில் பல்வேறு குறிப்புகளும் வரிசைப் படுத்தப்பட்டு இருந்தன. ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் முன்னணி தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தடுப்பூசி மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அந்தப் பட்டியலில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த பட்டியலில் குழந்தை பராமரிப்பு ஊழியர்கள், அஞ்சல் ஊழியர்கள் மற்றும் சாதாரண ஊழியர்கள் அடுத்த வரிசையில் இணைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கு முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அஸ்திரா ஜெனிகா மற்றும் கோவிசில்டு போன்ற தடுப்பூசி மருந்துகளின் முதல் பகுதியை பெற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்கதாகும்.

தடுப்பூசி மருந்துகளை பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ள வரிசையின் வாயிலாக மக்கள் அனைவரும் பெற்றுக் கொண்டு வருகின்றனர்.