பரிசோதனைக் கருவிகள் இலவசமாக வழங்கப்படும் – ஓமிக்ரோன் மாறுபாட்டை ஓட வைக்கும் முயற்சியில் அரசாங்கம்

test of covid
covid soeed test

கியூபெக் குடியிருப்பாளர்கள் திங்கள்கிழமை முதல் covid-19 விரைவான ஆன்டிஜன் பரிசோதனை கருவிகளை இலவசமாக மருந்தகங்களில் இருந்து வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் ஓமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் புதிய நடவடிக்கைகளை கியூபெக் அரசாங்கம் அமல்படுத்தியது.

14 வயது மேற்பட்டவர்களுக்கு ,கிட்டத்தட்ட 1900 மருந்தகங்களில் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விரிவான ஆன்டிஜன் பரிசோதனை கருவிகள் செவ்வாய்க்கிழமைக்குள் மாகாணத்திலுள்ள தொலைதூர பகுதிகளுக்கு கிடைக்கும் என்று கியூபெக் மருந்தக விற்பனையாளர்கள் சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கியூபெக் மக்கள் முடிந்தவரை விடுமுறை காலம் தொடங்குவதற்கு முன் பரிசோதனை கருவியின் அணுகலை பெறலாம் என்று சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனை கருவிகள் விடுமுறை காலத்தின் ஆரம்பத்தில் விநியோகிக்கப்படும் என்ற நம்பிக்கையில் இலவசமாக விரைவான பரிசோதனை கருவிகளை வழங்குவதாக மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு பரிசோதனை கருவியிலும் ஐந்து விரைவான சோதனைகள் உள்ளன. கியூபெக் மாகாணத்தில் உள்ள நீண்ட கால பராமரிப்பு இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்கள் போன்றவற்றில் திங்கள்கிழமை முதல் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருமென்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மாண்ட்ரியல் நகரின் சில பகுதிகளில் முக கவசம் அணியாமல் புத்தாண்டு தினத்தை முன்கூட்டியே கொண்டாடிய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதை காணும்போது மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததை உணர முடிகிறது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது