இனி முகக் கவசம் தேவையில்லை – கனடாவில் உள்ள பிராந்தியத்தில் அரசாங்கத்தின் புதிய திட்டங்கள்

halloween
halloween covid

கனடாவின் பீல் பிராந்தியத்தில் முககவசம் அணிவதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்த விவரங்களை உயர்மட்ட பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார். தற்பொழுது பிராந்தியத்தில் covid-19 வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போதைய வழக்குகளின் எண்ணிக்கை நிலவரங்கள் அப்படியே இருக்கும் வரை,மார்ச் மாத இறுதியில் முக கவச கட்டுப்பாடுகள் நீட்டிக்க படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 2020 ஜூலை முதல் மாகாணம் முழுவதும் அமலில் உள்ள முகக்கவச கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்று ஒன்ராறியோ மாகாண முதல்வர் Doug Ford ஏற்கனவே தெரிவித்திருந்தார். பெரும்பாலான முனிசிபாலிட்டிகளில் உள்ளரங்க அமைப்புகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

பீல் பிராந்தியத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் லாரன்ஸ்,covid-19 நோய் தொற்றினால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மார்ச் மாதத்திற்கு பின்னர் முக கவசம் அணிய வேண்டிய கட்டுப்பாடுகள் நீட்டிக்க படுவதற்கான வாய்ப்பில்லை என்று Brampton சிட்டி ஹாலில் நடைபெற்ற மாநாட்டில் தெரிவித்தார்.

பொது சுகாதார நடவடிக்கைகள் விரைவாக மேம்படுவதால் ,மாகாணத்தில் கிட்டத்தட்ட எஞ்சியுள்ள அனைத்து பொதுசுகாதார கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு தீவிரமான திட்டத்தை மாகாண அரசாங்கம் தயார் செய்துள்ளது