கனடாவின் முக்கிய மாகாணங்களில் இன்று முதல் அமலுக்கு வரும் நடவடிக்கை! பொதுமக்களுக்கு பிறப்பிக்கப்படும் கட்டாய உத்தரவு!

masks-720x450
கனடாவில் முகக்கவசம் கட்டாயமாகிறது (ஆதாரம்: CP24)

ஓட்டாவா மற்றும் ஒன்ராறியோவில் உள்ள பல நகரங்களில் இன்று (07/07/2020) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகள், முகக்கவசம் அணிவதால் மருத்துவ சிக்கலை எதிர்கொள்ளும் நபர்கள் தவிர, மற்ற அனைவரும் பொதுவெளியில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இல்லாத பணியாளர்கள், மூடப்பட்ட பகுதிக்குள் பணியாற்றும் போது முகக்கவசம் அணிய தேவையில்லை.

மற்றபடி பொது இடங்களில், அனைத்து பகுதிகளிலும் முகக்கவசம் அணிவது  கட்டாயமாகிறது.

கட்டாயமாக முகக்கவசம் கொள்கையை அறிமுகப்படுத்த சுகாதார பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு சட்டத்தின் கீழ் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms