Face mask : முகக்கவசம் அணிய மறுத்து கனடா முழுவதிலும் பேரணி! இக்கட்டான நேரத்தில் அரசுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

face mask
Protest Against Face Mask Canada

முகக்கவசம் ( Face mask ) அணிந்தால் தான் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்ற நிலை இருக்கும் போது, கட்டாய முகக் கவச உத்தரவுக்கு எதிராக கனடாவில் பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.

கனடா முழுவதிலும் பல மாகாணங்களில் முகக் கவச எதிர்ப்புப் பேரணிகள் நடைபெற்றன.

கட்டாய முகக்கவசக் கொள்கைகளை தீர்மானிக்கும் பேரணிகள் பல கனேடிய நகரங்களில் இடம்பெற்றன.

பல மாகாணங்களில் கொரோனா தொற்று மீண்டும் பரவி விடும் என்ற கவலைகள் இருந்தபோதிலும், முகக்கவச எதிர்ப்பாளர்கள் போராட்டத்திற்கு தொடர்ந்து அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தனர்.

வான்கூவர், கல்கரி, சாஸ்கடூன், வின்னிபெக் மற்றும் ஒட்டாவா ஆகிய நகரங்களில் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், முக்கவசம் அணியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பேரணி நடத்தினர்.

“மார்ச் டு அன்மாஸ்க்” இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட அவர்கள், பொது இடங்களில் முகக்கவசங்களை அணிவது, மக்களின் தன்னார்வமாக இருக்க வேண்டும்.

அரசாங்கத்தால் அவை கட்டாயப்படுத்தப் படக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனர்.

கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதில் முகக் கவசங்களின் பங்கு முக்கிய இடம் வகித்தாலும், நோயிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும் என்று கூறினர்.

அச்சத்தின் அடிப்படையிலான கொள்கைகள் குறித்து அவர்கள் கவலைப் படுவதாகப் பேரணி அமைப்பாளர்கள் கூறினர்.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms