சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கை – மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றுடன் கனமழை

rainfall toronto environment canada
crerdit- cp24 rain

டொரன்டோ நகரில் வானிலை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. நாள் முழுவதும் 30 முதல் 50 மில்லிமீட்டர் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது. டொரன்டோ நகரில் திங்கட்கிழமை இரவு 5 முதல் 10 மில்லி மீட்டர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டொரன்டோ நகரில் குடியிருப்பாளர்கள் 5 முதல் 10 மில்லி மீட்டர் மழையை எதிர் பார்க்கலாம் என்று இரவு 7 மணி நிலவரப்படி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழையின் காரணமாக ஈரமான சாலைகள் மற்றும் குறைவான பார்வைகள் போன்றவை பயணத்தை கடினமாக்க கூடும் .

குறைவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தெற்கு ஒன்டாரியோ முழுவதும் கனமழை பெய்யக் கூடும் என்பதால் வடகிழக்கிலிருந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.

மழையானது மாலைநேரத்தில் குறையும் என்று கூறப்படுகிறது. ஆனால் அடுத்த நாள் மீண்டும் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் உருவாகும் அபாயம் உள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மழை பெய்வதற்கு 60 சதவீதம் வாய்ப்புள்ளது .மேலும் மணிக்கு 30 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.

மழை நீர் வடிவதற்கு போதிய இட வசதிகள் இல்லாத பகுதிகளில் நீர்த்தேக்கங்கள் உருவாகும். ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்ற நீர்நிலைகளுக்கு அருகிலுள்ள நிலையற்ற கரைகள் மற்றும் வழுக்கும் சேறுகள் போன்றவற்றினால் அபாயகரமான நிலை உருவாகக்கூடும் என்று கூறப்படுகிறது.