ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஜேசன் கென்னி நேரில் சந்திப்பு – குழந்தை பராமரிப்பு திட்டத்திற்கான ஒப்பந்தம்

kenney alberta
alberta

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எட்மன்ட்டனில் நடைபெற உள்ள நிகழ்வில் அல்பேட்டாவின் முதல்வர் ஜேசன் கென்னியை சந்தித்து குழந்தை பராமரிப்பு தொடர்பான ஒப்பந்தத்தை அறிவிக்க உள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கான குழந்தை பராமரிப்பு திட்டத்தில் ஒரு பிரதேசம் மற்றும் ஏழு மாகாணங்கள் உடன் $30 பில்லியன் டாலர்கள் கூட்டாட்சி லிபரல் கட்சியானது ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளது.

நாடு முழுவதும் குழந்தை பராமரிப்பு விலையை சராசரியாக $10 டாலர்களாக குறைப்பதற்கு இந்த ஒப்பந்தம் உறுதியளிக்கிறது. ஆனால் இன்னும் ஒன்டாரியோ மற்றும் ஆல்பர்ட்டா ஆகிய மாகாணங்கள் இடைநிறுத்தம் செய்துள்ளன.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது அமைச்சர்கள் கூட்டத்தில் நேரில் சந்திப்பதற்கு எட்மன்டன்னுக்கு வருவார்கள் என்று பிரதமர் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் மற்றும் குடும்ப ஆதரவாளர்கள் கூட்டாட்சியின் திட்டத்தை பரவலாக கொண்டாடினர். கரீனா கோல்ட், கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் ,ஜேசன் கென்னி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிற மாகாணங்களின் அரசியல்வாதிகள் ஆகியோர் திங்களன்று அறிவிப்பில் அடங்குவர் என்று அல்பேட்டா அரசாங்கம் கூறுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட போது வீட்டிலேயே தங்கி இருக்கும் பெற்றோருக்கு கணக்கு எடுக்கவில்லை என்று ஜேசன் கென்னி கூறினார். நகர்புற அரசாங்கம் ,யூனியன் என்று அவர் கூறுவதை மட்டுமே ஆதரிக்கும் என்று தெரிவித்தார்.