தாய், மகன் மற்றும் மகளை கொலை செய்த குற்றவாளி – தான் ஒரு இறையாண்மை கொண்ட அரச

canada ajax murder
east toronto murder fenn

கனடாவின் கிழக்கு டொராண்டோவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்களை கொலை செய்ததாக கோரி ஃபென் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். கிழக்கு டொரன்டோ பகுதியில் வசித்து வந்த பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் உயிரற்ற நிலையில் காவல்துறையினரால் கண்டறியப்பட்டனர்.

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கோரி ஃபென் இரண்டாம்நிலை கொலைக்கான மூன்று குற்றச்சாட்டுகள் குறித்து குற்ற உணர்வு இல்லை என்று ஒப்புக்கொண்டார். 39 வயதுடைய கிராஸீமிரா ,அவரது 15 வயது மகன் ராய் மற்றும் 13 வயதுடைய மகள் வெனிலியா ஆகிய மூவரும் கொலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.

கிராசிமிராவின் மகன் ராய் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளார். மகள் வெனிலியா மற்றும் தாய் கிராஸிமிரா ஆகிய இருவரும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி ஃபென்னை விட்டு கிராஸிமிரா பிரிந்ததை தொடர்ந்து ஆத்திரமடைந்த ஃபென், அஜாக்சில் வைத்து மூவரையும் கொலை செய்ததாக அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

33 வயது நிரம்பிய ஃபென் நீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் தான் ஒரு இறையாண்மை கொண்ட அரசர் என்று கூறுகிறார். ஃபென் தரப்பிலிருந்து ஆவணங்களை சமர்ப்பிக்க அவரது வழக்கறிஞர் வழிகாட்டுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

குற்றவாளி துப்பறியும் நபரிடம் ” தான் கோகோயின் மன நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இல்லையெனில் கிராஸிமிராவை ஒரு போதும் காயப்படுத்தி இருக்க மாட்டேன்” என்றும் கூறியதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.