திரையரங்குகள்,உணவு விடுதிகள் மீண்டும் தொடங்கும் – ஒன்டாரியோ மாகாணம்

DOUG FORD
DOUG FORD

முதல்வர் டக் போர்ட் திங்கட்கிழமை பிற்பகல் ஒட்டாவா நகரிலிருந்து அறிவிப்பினை வெளியிடுவார். முதல்வர் டாக் போர்டு உடன் ஒட்டாவா முதல்வர் ஜிம் வாட்சன் ,ஒட்டாவாவின் MPP வெஸ்ட் நேப்பியன் ஜெர்மி ராபர்ட்ஸ் மற்றும் தி ஒட்டாவா மருத்துவமனையின் CEO மற்றும் தலைவரான கேமரூன் லவ் போன்றோர் பங்கேற்கின்றனர்.

கடந்த ஜூலை 16ஆம் தேதி மாகாணத்தில் covid-19 கட்டுப்பாடுகள் மூன்றாம் கட்ட தளர்வுகள் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து இரண்டு வாரங்களில் முதல்வர் டாக் போர்டு அறிவிப்பினை வெளியிடுகிறார்.

மூன்றாம் கட்ட அறிவிப்பில் உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் திரையரங்குகள் போன்றவை covid-19 கட்டுப்பாடுகளுடன் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உள்ளக உணவு விடுதிகள் மீண்டும் தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட தளர்வுகள் சுமார் 21 நாட்களுக்கு ஒன்டாரியோ மாகாணத்தில் நீடிக்கும். மாகாணங்களில் உள்ள 12 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயது உடையவர்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் குறைந்த பட்சம் முதல் கட்ட தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வரை 75 சதவீத மக்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்றுவிடுவார்கள் என்று மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதிக அளவிலான பொது சுகாதார அமைப்புகளிலும் 70 சதவீத குடியிருப்பாளர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்ற பின்னர் மாகாணம் இறுதிக்கட்ட தளர்வுகள் நோக்கி செல்லும் என்று கூறியது.

மாகாணத்திலுள்ள குடியிருப்பாளர்களில் 90% குடியிருப்பாளர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அச்சுறுத்தி வரும் covid-19 டெல்டா மாறுபாட்டை எதிர்த்துப் போராடலாம் என ஒன்டாரியோ மாகாணத்தின் முதன்மை மருத்துவர் பரிந்துரைத்துள்ளார்